தொழில் அதிபர் வீட்டில் சி.பி.ஐ. திடீர் சோதனை


தொழில் அதிபர் வீட்டில் சி.பி.ஐ. திடீர் சோதனை
x
தினத்தந்தி 14 July 2021 1:22 AM IST (Updated: 14 July 2021 1:22 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் தொழில் அதிபர் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

நெல்லை:
நெல்லையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் வாடகை கார் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது வீட்டில் நேற்று சென்னையில் இருந்து வந்த சி.பி.ஐ. அதிகாரிகள் 10 பேர் திடீர் சோதனை நடத்தினர். காலை 8 மணிக்கு தொடங்கிய சோதனை 10 மணி வரை நீடித்தது. 

பின்னர் அவரது வாடகை கார் நிறுவனத்தில் மாலை வரை சோதனை நடந்தது. மேலும் சிலரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இந்த திடீர் சோதனை நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Next Story