150 கிலோ கடல் அட்டைகளுடன் படகு பறிமுதல்; 2 பேர் கைது


150 கிலோ கடல் அட்டைகளுடன் படகு பறிமுதல்; 2 பேர் கைது
x
தினத்தந்தி 14 July 2021 1:23 AM IST (Updated: 14 July 2021 1:23 AM IST)
t-max-icont-min-icon

150 கிலோ கடல் அட்டைகளுடன் படகு பறிமுதல்; 2 பேர் கைது

பனைக்குளம்
மண்டபம் அருகே 150 கிலோ கடல் அட்டைகளுடன் படகு பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ரோந்து பணி
மண்டபம் அருகே உள்ள வேதாளை கடல் பகுதியில் நேற்று மண்டபம் வனச்சரகர் வெங்கடேஷ் தலைமையில் வனத்துறையினர் படகு ஒன்றில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வனத்துறையினரின் ரோந்துப் படகை கண்டதும் வேதாளைகுறவன் தோப்பு கடல் பகுதியில் நாட்டு படகு ஒன்று வேகமாக செல்வதை பார்த்த வனத்துறையினர் தொடர்ந்து அந்த நாட்டு படகை வனத்துறையினர் ரோந்து படகில் சென்று விரட்டி பிடிக்க முயன்றனர். 
அப்போது வனத்துறையினர் படகு அருகே வருவதை கண்ட அந்த படகில் இருந்தவர்கள் ஏராளமான சாக்குமூடைகளை கடலில் வீசியது தெரிய வந்தது. அந்த படகின் அருகில் சென்ற வனத்துறையினர் அந்த படகில் ஏறி சோதனை செய்தனர்.
கடல் அட்டைகள்
அப்போது அந்த படகில் 13 சாக்கு மூடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட 150 கிலோ கடல் அட்டைகள் இருப்பது தெரியவந்தது. தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை பிடித்ததாக வேதாளை பகுதியை சேர்ந்த முகமதுநசீர், மீரான்கனி ஆகிய 2 பேரையும் கைது செய்ததுடன் சுமார் 150 கிலோ கடல் அட்டை மற்றும் நாட்டு படகையும் பறிமுதல் செய்த வனத்துறையினர் மண்டபம் வனத்துறை அலுவலகம் கொண்டு வந்து விசாரணை செய்து வருகின்றனர். விசாரணையில் வனத்துறையினருக்கு பயந்து உயிருடன் இருந்த சுமார் 500 கிலோ கடல் அட்டைகளை கடலில் வீசியது தெரியவந்தது. வனத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள் பதப்படுத்தப்பட்ட பின்பு கடத்தல் ஏஜெண்டுகள் மூலம் இலங்கைக்கு கடத்துவதற்காக பிடித்து வரப்பட்டது என்றும் கூறப்படுகின்றது.

Next Story