சங்கரலிங்க சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றம்
அம்பை அருகே சங்கரலிங்க சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றம் நடந்தது.
அம்பை:
அம்பாசமுத்திரம் அருகே சின்ன சங்கரன்கோவிலில் உள்ள பிரசித்தி பெற்ற கோமதி அம்பாள் சமேத சங்கரலிங்க சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றம் நேற்று காலை நடந்தது. தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி பக்தர்கள் இன்றி கோவில் நிர்வாகத்தினர் முன்னிலையில் கொடியேற்றம் நடந்தது.
விழா நாட்களில் சுவாமி-அம்பாள் வீதியுலா கோவில் வளாகத்திலேயே நடைபெறுகிறது. வருகிற 23-ந் தேதி தாமிரபரணி நதிக்கரையில் நடைபெறும் தபசு காட்சியும் கோவில் வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. ஆடித்தபசு நிகழ்ச்சியை தொடர்ந்து 24, 25-ந் தேதிகளில் நடைபெறும் தெப்ப உற்சவமும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியில் சங்கரலிங்க சுவாமி கோவில் அறங்காவலர் குழு தலைவர் முருக சாமிநாதன், அகஸ்தீஸ்வர சுவாமி அறங்காவலர் குழு தலைவர் சங்கு சபாபதி, முன்னாள் செயலாளர் சங்கரன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் வேலாயுதம், ராஜகோபால், வள்ளிநாயகம், ரவி சங்கரன், சுப்பிரமணியன், பாலசுப்பிரமணியன், அம்பை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story