டாஸ்மாக் கடைகளில் திருடிய 3 பேர் கைது


டாஸ்மாக் கடைகளில் திருடிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 14 July 2021 3:19 AM IST (Updated: 14 July 2021 3:19 AM IST)
t-max-icont-min-icon

கடையநல்லூரில் டாஸ்மாக் கடைகளில் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடையநல்லூர்:
தென்காசி மாவட்டம் புளியங்குடி, கடையநல்லூர் ஆகிய பகுதிகளில் கடந்த மாதம் தொடர்ந்து டாஸ்மாக் கடைகளில் கதவை உடைத்து திருட்டு சம்பவம் நடந்து வந்தது. இதில் தொடர்புடையவர்களை பிடிக்க புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணன் மேற்பார்வையில் கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், புளியங்குடி இன்ஸ்பெக்டர் ராஜாராம் ஆகியோர் தலைமையில் போலீசார் களம் இறங்கினர். அவர்கள் திருட்டு சம்பவம் நடந்த பகுதிகளில் உள்ள சுமார் 50-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். 

அதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், கடையநல்லூர் அருகே மேலக்கடையநல்லூர் கருமாரியம்மன் கோவில் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் காசிதர்மம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்த அய்யனு மகன் மனோகரன் என்ற கென்டி (வயது 22), அச்சன்புதூர் மேலத்தெருவை சேர்ந்த பண்டாரம் மகன் சொர்ணகுமார் (30) மற்றும் 18 வயது வாலிபர் என்பதும், அவர்கள் கடையநல்லூர் மற்றும் புளியங்குடி பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கதவை உடைத்து திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. 

இதையடுத்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் திருடுவதற்கு பயன்படுத்திய 2 ேமாட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த திருட்டு வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story