சங்கரன்கோவில் அருகே வனப்பகுதியில் திடீர் தீ


சங்கரன்கோவில் அருகே வனப்பகுதியில் திடீர் தீ
x
தினத்தந்தி 14 July 2021 3:30 AM IST (Updated: 14 July 2021 3:30 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவில் அருகே வனப்பகுதியில் திடீரென தீப்பிடித்தது. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.

சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே உள்ளது சின்னகோவிலாங்குளம் கிராமம். இதன் அருகில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் சமூக வனக்காடு உள்ளது. இந்த வனப்பகுதியில் நேற்று மாலை திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. 

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சங்கரன்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயன் தலைமையில் போக்குவரத்து அலுவலர் ஜெயராஜ் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. 



Next Story