மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் படுகாயம்


மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் படுகாயம்
x
தினத்தந்தி 14 July 2021 3:36 AM IST (Updated: 14 July 2021 3:36 AM IST)
t-max-icont-min-icon

சிவகிரி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் படுகாயம் அடைந்தார்.

சிவகிரி:
சிவகிரி அருகே உள்ள ராயகிரி நகர பஞ்சாயத்து வடுகப்பட்டியில் பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்தவர் ராக்கப்பன் மகன் இருளப்பன் (வயது 37). கூலி தொழிலாளி. இவர் தென்மலையில் இருந்து வடுகப்பட்டிக்கு நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். 

அப்போது வேகத்தடையில் சென்றபோது, ேமாட்டார் சைக்கிளின் சைடு ஸ்டாண்ட் கீழே இடித்ததில் மோட்டார் சைக்கிள் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. 

இதில் படுகாயமடைந்த இருளப்பன் சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  இந்த விபத்து குறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story