முசிறி சப்-கலெக்டருக்கு கொரோனா


முசிறி சப்-கலெக்டருக்கு கொரோனா
x
தினத்தந்தி 14 July 2021 3:49 AM IST (Updated: 14 July 2021 3:49 AM IST)
t-max-icont-min-icon

முசிறி சப்-கலெக்டருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

முசிறி,
திருச்சி மாவட்டம் முசிறியில் சப்-கலெக்டராக பணிபுரிந்து வருபவர் ஜோதிசர்மா. இவர் கொரோனா பாதிப்பு தொடர்பாக தமிழக அரசு வழிகாட்டு முறைகளை நடைமுறைப்படுத்தும் பணியிலும், வருவாய்த்துறை அலுவலக பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இந்தநிலையில் சமீபத்தில் ஜோதிசர்மா கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து தனிமைப்படுத்தி கொண்ட சப்-கலெக்டர் ஜோதிசர்மா தொடர் மருத்துவ சிகிச்சை எடுத்து வருகிறார். இதையடுத்து முசிறி சப்-கலெக்டர் அலுவலகம் மற்றும் அலுவலக வளாகத்தை சுற்றிலும் கிருமி நாசினி மருந்து தெளித்து சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முசிறியில் சப்-கலெக்டருக்கு கொரோனா தொற்று உறுதியான சம்பவம் வருவாய்த்துறையினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story