தொழிலதிபரை மிரட்டிய வழக்கில் இந்து மகாசபை கட்சி தலைவர் கைது
சென்னை அயப்பாக்கம், தொழிலதிபரை மிரட்டிய வழக்கில் இந்து மகாசபை கட்சி தலைவர் கைது செய்தனர்.
திரு.வி.க. நகர்,
சென்னை அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். தொழிலதிபரான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பாதுகாப்பு நிறுவனத்தைச் சேர்ந்த சிலருக்கும் சொத்து தொடர்பாக பிரச்சினை இருந்தது.
இந்த வழக்கு தொடர்பாக 2019-ம் ஆண்டு ராஜேஷை கைது செய்த திருமங்கலம் போலீசார் செங்குன்றம் அருகே உள்ள பண்ணை வீட்டில் அடைத்து வைத்து அவரையும், அவரது தாயாரையும் மிரட்டி சொத்துக்களை எழுதி வாங்கி பத்திரபதிவு செய்தனர்.
இந்த வழக்கில் திருமங்கலம் உதவி கமிஷனர் சிவக்குமார், இன்ஸ்பெக்டர் சரவணன், அனைத்து இந்திய இந்து மகா சபா கட்சியின் தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ உள்பட 10 பேர் மீது சி.பி.சி.ஐ.டி.போலீசார் வழக்கு பதிவு செய்தனர். முதல் கட்டமாக கோடம்பாக்கம் ஸ்ரீ நேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story