ஓசியில் பிரியாணி தர மறுப்பு: பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


ஓசியில் பிரியாணி தர மறுப்பு: பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 14 July 2021 11:45 AM IST (Updated: 14 July 2021 11:45 AM IST)
t-max-icont-min-icon

ஓசியில் பிரியாணி தர மறுத்ததால் பிரியாணி கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

திருவள்ளூர், 

திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள திருமழிசை பகுதியை சேர்ந்தவர் எபி என்கிற எபினேசன் (வயது 29). கடந்த மாதம் எபினேசன் திருவள்ளூரை அடுத்த வயலாநல்லூரை சேர்ந்த தனது நண்பர்களான மதி என்கிற ஸ்டீபன் (28), அஜித்குமார் (28) ஆகியோருடன் அந்த பகுதியில் உள்ள பிரியாணி கடைக்கு சென்றனர்.

அவர்கள் தங்களுக்கு ஓசியில் பிரியாணி தருமாறு கேட்டனர். ஓசியில் தர மறுத்ததால் கடைக்காரரை மிரட்ட பிரியாணி கடை மீது பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பிச்சென்று விட்டனர். இது குறித்து வெள்ளவேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து எபிநேசன், ஸ்டீபன், அஜித்குமார் ஆகியோரை கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் எபிநேசன், ஸ்டீபன் ஆகியோர் மீது பல்வேறு வழக்குகளில் தொடர்பு இருப்பதால் குண்டர்சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார், மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீசுக்கு பரிந்துரை செய்தார்.

அதனை ஏற்று கலெக்டர், எபிநேசன், ஸ்டீபன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க ஆணை பிறப்பித்தார்.

Next Story