சிறுத்தொண்டநல்லூர் கோவிலில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


சிறுத்தொண்டநல்லூர் கோவிலில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
x
தினத்தந்தி 14 July 2021 4:54 PM IST (Updated: 14 July 2021 4:54 PM IST)
t-max-icont-min-icon

சிறுத்தொண்டநல்லூர் கோவிலில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

ஏரல்:
ஏரல் அடுத்துள்ள சிறுத்தொண்டநல்லூர் சங்கரஈஸ்வரர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆடித்தபசு திருவிழா பிரசித்தி பெற்றதாகும். 
இக்கோவிலில் நேற்று காலையில் அரசு வழிகாட்டுதல்படி கொடியேற்றத்துடன் ஆடித்தபசு திருவிழா தொடங்கியது. கொடியேற்ற நிகழ்ச்சியை முன்னிட்டு கோவிலில் அதிகாலையில் நடைதிறக்கப்பட்டு,  பூஜைகள் நடத்தப்பட்டு கொடிமரத்தில் கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள், தீபாராதனைகள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
 முக்கிய விழாவான ஆடித்தபசு விழா வருகிற 23-ந்தேதி நடக்கிறது. இதில் சங்கரஈஸ்வரர், கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயணராக காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி மற்றும் சிறப்பு பூஜை, தீபாராதனை நடக்கிறது. 
திருவிழா நிகழ்ச்சிகளில் பக்தர்களுக்கு அனுமதியில்லை. கொரோனா தொற்று ஊரடங்கால் அரசு நெறிமுறைகளுக்கு உட்பட்டு எளிய முறையில் நடத்திட கோவில் நிர்வாகம் மற்றும் விழாக்குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

Next Story