மண்எண்ணெய் கேனுடன் தமிழ்ப்புலிகள் கட்சியினர் தர்ணா
தேனி அருகே கிராம நிர்வாக அலுவலகம் முன்பு மண்எண்ணெய் கேனுடன் தமிழ்ப்புலிகள் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி :
கிராம நிர்வாக அலுவலகம் முன்பு அவர்கள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ஒரு கேனில் மண்எண்ணெய் கேனுடன் இந்த தர்ணாவில் பங்கேற்றனர். வடவீரநாயக்கன்பட்டியில் கடந்த 1983-ம் ஆண்டு அரசு வழங்கிய தொகுப்பு வீட்டை பயனாளிகள் 2 பேரிடம் இருந்து கந்துவட்டிக்கு பணம் கொடுத்த நபர்கள் அபகரித்துக் கொண்டதாகவும், அந்த வீடுகளை மீண்டும் அதற்கு உரிய நபர்களிடம் மீட்டுக் கொடுக்கக்கோரி மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் தர்ணாவில் ஈடுபட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
பின்னர், அவர்களிடம் கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் பேச்சுவார்த்தை நடத்தினார். வருவாய்த்துறை உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அளித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். இதையடுத்து சுமார் அரை மணி நேரம் நடந்த போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story