தூத்துக்குடியில் மூதாட்டியின் 6 பவுன் தங்க சங்கிலி மாயம்


தூத்துக்குடியில் மூதாட்டியின் 6 பவுன் தங்க சங்கிலி மாயம்
x
தினத்தந்தி 14 July 2021 8:37 PM IST (Updated: 14 July 2021 8:37 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் மூதாட்டியின் 6 பவுன் தங்க சங்கிலி மாயமானது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி குறிஞ்சிநகரை சேர்ந்தவர் சுப்பையா. இவருடைய மனைவி சந்திராவதி (வயது 68). இவர் நேற்று முன்தினம் குறுக்குச்சாலையில் இருந்து தூத்துக்குடிக்கு பஸ்சில் வந்தார். அவர் தூத்துக்குடி 4-ம் கேட் அருகே வந்த போது, அவர் கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்கசங்கிலி காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து அந்த பகுதியில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. காணாமல் போன நகையின் மதிப்பு ரூ.90 ஆயிரம் என்று கூறப்படுகிறது.
இது குறித்து சந்திராவதி தூத்துக்குடி வடபாகம் போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story