கொரோனா தடுப்பூசி முகாம்


கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 14 July 2021 9:51 PM IST (Updated: 14 July 2021 9:51 PM IST)
t-max-icont-min-icon

கீழக்கரையில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

கீழக்கரை, 
கீழக்கரை பழைய மீன்கடை சேரான் தெருவில் காதர்பாட்சா முத்து ராமலிங்கம் எம்.எல்.ஏ. வலியுறுத்தலின்படி முத்து இபுராகிம் தர்ம அறக்கட்டளை மற்றும் கீழக்கரை சுகாதாரத்துறை சார்பில் பெண் களுக்கான கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இதுபோன்று வாரம் இருமுறை அனைத்து தெருக்களிலும் தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று வட்டார மருத்துவர் ராசிக்தீன் தெரிவித்தார். முகாமை கீழக்கரையை சேர்ந்த பெண் வக்கீல் நாதியா ஹனிபா தொடங்கி வைத்தார். டாக்டர் ஆயிஷா பர்வீன், தி.மு.க. இளை ஞரணி அமைப்பாளர் வக்கீல் ஹமீது சுல்தான், மாணவரணி அமைப் பாளர் இப்திகார் ஹசன், வடக்கு தெரு நாசா சமூக நல அமைப்பு உறுப் பினர் செய்யது நசுருதீன் மற்றும் தி.மு.க. உறுப்பினர்கள் மீரான் அலி, எபன், நயீம், பயாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். முடிவில் அறக்கட்டளை தலைவர் முகமது ஹனிபா நன்றி கூறினார்.

Next Story