மடத்துக்குளம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் விதிகளை மீறி ஆபத்தான முறையில் வைத்துள்ள விளம்பரப் பதாகையால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம்


மடத்துக்குளம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் விதிகளை மீறி ஆபத்தான முறையில் வைத்துள்ள விளம்பரப் பதாகையால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம்
x
தினத்தந்தி 14 July 2021 9:53 PM IST (Updated: 14 July 2021 9:53 PM IST)
t-max-icont-min-icon

மடத்துக்குளம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் விதிகளை மீறி ஆபத்தான முறையில் வைத்துள்ள விளம்பரப் பதாகையால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம்

போடிப்பட்டி
மடத்துக்குளம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் விதிகளை மீறி ஆபத்தான முறையில் வைத்துள்ள விளம்பரப் பதாகையால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.
விதிமீறல்
 மடத்துக்குளத்தையடுத்த நரசிங்காபுரம் பகுதியில் கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விதிகளை மீறி தனியார் வணிக நிறுவனம் ஒன்று விளம்பர பதாகை அமைத்துள்ளது. இந்த பகுதியில் உள்ள சர்க்கரை மில் சாலை சந்திப்பு குறித்த அறிவிப்பு பலகையை முழுமையாக மறைத்து இந்த விளம்பர பதாகை வைக்கப்பட்டுள்ளது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வரும் வாகனங்கள் சாலை சந்திப்பு குறித்து தெரியாமல் அந்த சாலையிலிருந்து வரும் வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது.
இந்த பகுதி நெடுஞ்சாலைத்துறையினரால் ஏற்கனவே விபத்துப் பகுதியாக அறிவிக்கப்பட்டு இதே பகுதியில் அது குறித்த எச்சரிக்கைப் பலகை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த விளம்பர  பலகை மின் கம்பங்களை இணைத்து கட்டப்பட்டுள்ளதால் மின் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. அத்துடன் தற்போது காற்றின் வேகத்தால் இந்த விளம்பர  பதாகையின் பெரும்பகுதி கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கிறது.
விபத்து பகுதி
இது காற்றில் எதிர்பாராத விதமாக பறக்கும் போது இந்த வழியாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகளின் மீது பட்டு விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. எனவே இதுபோன்று ஆபத்தான முறையில் அமைக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகையை     உடனடியாக அகற்றவும் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் சம்பத்ந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் மடத்துக்குளம் நால் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் விளம்பரப் பதாகைகள் அமைக்கப்படாமல் கண்காணிக்கப்படுவதும், விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அவசியமாகும். ஒருசிலரின் விளம்பர மோகத்துக்காகவும், சில நிறுவனங்களின் விற்பனையை அதிகரிக்கவும் மற்றவர்கள் உயிரோடு விளையாடும் போக்கு ஆரம்ப கட்டத்திலேயே தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

Next Story