உடுமலையில் உள்ள டவுன் பஸ்களில் தினசரி சுமார் 15ஆயிரம் பெண்கள் கட்டணமில்லாமல் இலவசமாக பயணம்
உடுமலையில் உள்ள டவுன் பஸ்களில் தினசரி சுமார் 15ஆயிரம் பெண்கள் கட்டணமில்லாமல் இலவசமாக பயணம்
உடுமலை
உடுமலையில் உள்ள டவுன் பஸ்களில் தினசரி சுமார் 15ஆயிரம் பெண்கள் கட்டணமில்லாமல் இலவசமாக பயணம் செய்கின்றனர்.
பஸ்கள் இயக்கம்
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளதில், கூடுதல் தளர்வுகளின்படி கடந்த 5-ந்தேதி முதல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. உடுமலை அரசு போக்குவரத்துக்கழகத்தில் வெளியூர் செல்லும் பஸ்கள் 36-ம், டவுன்பஸ்கள் 58-ம், ஸ்பேர் பஸ்கள் 7-ம் என மொத்தம் 101 பஸ்கள் உள்ளன.
இதில் அரசு உத்தரவுப்படி கடந்த 5-ந்தேதி உடுமலையில் முதல்கட்டமாக அரசு பஸ்கள் 50 இயக்கப்பட்டன. பஸ்களுக்கு பயணிகள் வருகை அதிகரித்ததைத்தொடர்ந்து அடுத்தடுத்து கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று வெளியூர் செல்லும் பஸ்கள் 35-ம், டவுன் பஸ்கள் 33-ம் எனமொத்தம் 68 பஸ்கள் இயக்கப்பட்டன.
பெண்பயணிகள்
அரசு உத்தரவுப்படி டவுன்பஸ்களில் பெண்களுக்கு கட்டணமில்லா பயணச்சீட்டு வழங்கப்படுகிறது. உடுமலையில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக டவுன் பஸ்களில் தற்போது சராசரியாக தினசரி 15 ஆயிரம் பெண்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்து வருவதாக அரசு போக்குவரத்துக்கழகம் தரப்பில் கூறப்படுகிறது. உடுமலையில் நேற்று 33 டவுன்பஸ்கள் இயக்கப்பட்ட நிலையில் சில வழித்தடங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.
சில வழித்தடங்களில் டவுன்பஸ்கள் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்பட்டதால் மத்திய பஸ் நிலையத்தில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர். உடுமலையில் வெளியூர் செல்லும் தனியார் பஸ்கள் 5-ம், தனியார் டவுன்பஸ்கள் 19-ம் உள்ளன. இதில் நேற்று 3 தனியார் டவுன்பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டன. பொள்ளாச்சி, பழனி மற்றும் திருப்பூர் ஆகிய இடங்களைச்சேர்ந்த வெளியூர் செல்லும் தனியார் பஸ்களும் இயக்கப்பட்டன. உடுமலையைச்சேர்ந்த வெளியூர் செல்லும் தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை.
Related Tags :
Next Story