திருமணமான 25-வது நாளில் புதுப்பெண் மாயம்


திருமணமான 25-வது நாளில் புதுப்பெண் மாயம்
x
தினத்தந்தி 14 July 2021 10:18 PM IST (Updated: 14 July 2021 10:18 PM IST)
t-max-icont-min-icon

திருமணமான 25-வது நாளில் புதுப்பெண் மாயம்

கீரனூர், ஜூலை.15-
வெள்ளனூர் அருகே உள்ள கீழ முத்துவுடையான் பட்டியை சேர்ந்தவர் ராமையா. இவரது மகன் குமரேசன் (வயது 31). இவருக்கும், அதே ஊரை சேர்ந்த ராதிகா (21) என்பவருக்கும்  கடந்த 25 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் பெரம்பூர் வீரமாகாளி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக தம்பதி சென்றனர். அப்போது, குமரேசன் பூஜை பொருட்கள் வாங்குவதற்காக சென்று உள்ளார். ராதிகா இயற்கைஉபாதை வருவதாக கூறி சென்றுள்ளார். அதன்பின் அவர் திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில் உடையாளிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story