பா.ஜனதா பிரமுகர்களை தாக்கிய வாலிபர் கைது


பா.ஜனதா பிரமுகர்களை தாக்கிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 14 July 2021 10:23 PM IST (Updated: 14 July 2021 10:23 PM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதா பிரமுகர்களை தாக்கிய வாலிபர் கைது

ஆலங்குடி, ஜூலை.15-
ஆலங்குடி இச்சடி அருகே உள்ள துலுக்கன் தோப்பு கிராமத்தை சேர்ந்தவர்  ரமேஷ்குமார் (வயது 40). இவர் பா.ஜனதா விவசாய அணி நிர்வாகி ஆவார். இவரும் பா.ஜனதா மாவட்ட துணைத்தலைவர் முள்ளூர் கும்முப்பட்டியை சேர்ந்த  ரெங்கசாமி (33) என்பவரும் இச்சடி கிராமத்தில் உள்ள பேக்கரியில் சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது, அங்கு வந்த தண்ணீர்பந்தல்பட்டி கிராமத்தை சேர்ந்த நாம் தமிழர் கட்சியைக் சேர்ந்த சசிக்குமார் (34) பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசினாராம். இதை ரமேஷ்குமார்,  ரெங்கசாமி ஆகியோர் தட்டிகேட்டனர். இதனையடுத்து சசிக்குமார் அவர்கள் இருவரையும் தாக்கினாராம். இதில் காயம் அடைந்த இருவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்த பா.ஜனதா மாவட்ட தலைவர் ராம சேதுபதி மற்றும் கட்சி நிர்வாகிகள் போலீஸ் நிலையத்தில் திரண்டனர். மேலும் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்யாவிட்டால் தஞ்சாவூர் சாலையில் இச்சடியில் சாலைமறியல் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனர். இதனையடுத்து செம்பட்டி விடுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சசிக்குமாரை கைது செய்தனர்.

Next Story