கொடைக்கானல் பகுதியில் பல வண்ணங்களில் விளையும் மக்காச்சோளம்


கொடைக்கானல் பகுதியில் பல வண்ணங்களில் விளையும் மக்காச்சோளம்
x
தினத்தந்தி 14 July 2021 10:29 PM IST (Updated: 14 July 2021 10:29 PM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானல் பகுதியில் பல வண்ணங்களில் மக்காச்சோளம் விளைந்துள்ளது.

கொடைக்கானல்:
சமதள பூமியில் மட்டுமே விளையும் மக்காச்சோளம், தற்போது கொடைக்கானல் மலைப்பகுதியிலும் விளைய தொடங்கியுள்ளது. வெப்பமான வானிலையே மக்காச்சோள பயிர்களுக்கு சிறந்தது ஆகும். ஆனால் தற்போது குளு, குளு சீதோஷ்ணநிலையை கொண்ட கொடைக்கானலிலும் மக்காச்சோளம் விளைகிறது. அதுவும், கொடைக்கானல் பகுதியில் பல வண்ணங்களில் மக்காச்சோளம் விளைவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 
கொடைக்கானல் பாம்பார்புரத்தை சேர்ந்த வக்கீல் ஆசீர் மோகன் என்பவர் வீட்டில் தான், பல வண்ண மக்காச்சோளம் விளைந்து வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர், ஆன்லைன் மூலம் மக்காச்சோள விதைகளை வாங்கி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நடவு செய்தார். தற்போது அவர் நடவு செய்த மக்காச்சோளம் விளைச்சல் அடைந்துள்ளது. சிகப்பு, மஞ்சள், கருப்பு உள்ளிட்ட நிறங்களில் மக்காச்சோள கதிர்கள் உள்ளன. அவற்றை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர். 
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆசீர்மோகன், கருப்பு நிற கேரட் சாகுபடி செய்து அறுவடை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அவர் கூறுகையில், இதுபோன்ற புது வித முயற்சிகளால் விவசாயத்தையும், சுற்றுலாவையும் மேம்படுத்த முடியும் என்றார்.

Next Story