கொரோனா 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்த குவிந்த பொதுமக்கள்


கொரோனா 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்த குவிந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 14 July 2021 10:42 PM IST (Updated: 14 July 2021 10:42 PM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையில் கொரோனா 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்த பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்தனர்.

புதுக்கோட்டை, ஜூலை.15-
புதுக்கோட்டையில் கொரோனா 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்த பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்தனர்.
கொரோனா தடுப்பூசி முகாம்
புதுக்கோட்டையில் கொரோனா தடுப்பூசி முகாம் நகர்மன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த ஒருவாரமாக கோவிஷீல்டு தடுப்பூசி மட்டுமே செலுத்தப்படுகிறது. தட்டுப்பாடு காரணமாக கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்படவில்லை. ஏற்கனவே முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் 2-வது டோஸ் தடுப்பூசி போடுவதற்கான தேதியையும் தாண்டி சென்றது. இதனால் 2-வது தவணை தடுப்பூசிக்காக பொதுமக்கள் காத்திருந்தனர்.
 இந்த நிலையில் நேற்று சந்தைபேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் கோவேக்சின் தடுப்பூசி 2-வது டோஸ் போட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதில் 2-வது தவணை தடுப்பூசி செலுத்த பொதுமக்கள் குவிந்தனர்.
நீண்ட வரிசையில்...
 டோக்கன் வழங்கும் இடத்தில் முண்டியபடித்தப் படியும், நெருக்கமாகவும் வரிசையில் நின்றனர். நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தினர்.

Next Story