திருப்பூர் மாவட்டத்தில் மது விற்ற 8 பேர் கைது
திருப்பூர் மாவட்டத்தில் மது விற்ற 8 பேர் கைது
திருப்பூர்,
கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவுப்படி, மாவட்டத்தில் தேவையின்றி சுற்றித் திரிபவர்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்து, கைது செய்து, வாகனங்களை பறிமுதல் செய்து வருகிறார்கள். அந்த வகையில் நேற்று திருப்பூர் மாவட்டம் முழுவதும் முக கவசம் அணியாமல் தேவை இல்லாமல் சுற்றித் திரிந்த 5 பேருக்கு ரூ.2,000 அபராதம் வசூலிக்கப்பட்டது.
மாவட்டத்தில் மது விற்பனையில் ஈடுபட்டவர்கள் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 24 மதுபாட்டில்கள், ரூ.480 பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story