பனியன் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
பனியன் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
பல்லடம்,
கேரள மாநிலம் இடுக்கி மறையுரைச் சேர்ந்தவர் சரவணக்குமார் (வயது 39). இவர் தற்போது பல்லடம் அருகே உள்ள மகாலட்சுமி நகரில் மனைவி மகாலட்சுமி (31), மற்றும் 10, 12, வயதில் 2 மகன்கள் ஆகியோருடன் வசித்து வந்தார். திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை வீட்டிற்கு வந்தவர் அவரது அறைக்குச் சென்று உள்பக்கமாக கதவை தாளிட்டுக்கொண்டார். சுமார் ஒரு மணி நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த அவரது மனைவி கதவை தட்டினார். கதவு திறக்கப்படாததால் ஜன்னல் வழியே பார்த்தபோது உள்ளே சரவணகுமார் மின்விசிறி மாட்டும் கொக்கியில் சேலையால் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் இருந்தார்.
இதைக் கண்டு அலறிய மகாலட்சுமியின் கதறல் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்து தூக்கில் தொங்கிக் கொண்டு இருந்த சரவணக்குமாரை மீட்டு சிகிச்சைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர் ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார் இதையடுத்து அவரது மனைவி மகாலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story