தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 14 July 2021 11:09 PM IST (Updated: 14 July 2021 11:09 PM IST)
t-max-icont-min-icon

தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

நல்லூர்
திருப்பூர்,முத்தணம்பாளையம் பாளையம், ஸ்ரீபாலாஜி நகரை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 41). வீரபாண்டி அருகே உள்ள டையிங் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்தார். இவரது மனைவி சுகுணா (25), மகன் ஹிருத்திக் (10), கொரோனா ஊரடங்கு காரணத்தால் வேலையின்றி இருந்ததால் இவருக்கு கடன் தொல்லை அதிகரித்துள்ளது. அதனால் சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. 
இந்தநிலையில் நேற்று காலை மனைவி மளிகை கடைக்கு சென்றுவர வெளியில் சென்ற உடன் அவர் திடீரென வீட்டுக்குள் சென்று மின்விசிறியில் தூக்குப்போட்டு தொங்கியுள்ளார். கடைக்கு சென்று திரும்பிய சுகுணா கணவரை பார்த்து அதிர்ச்சியடைந்து கதறி அழுதார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளனர். டாக்டர் வந்து பரிசோதித்த போது அவர் இறந்தது தெரியவந்தது. இது குறித்து நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story