வந்தவாசி; லாரி உரிமையாளர்கள் காத்திருப்பு போராட்டம்


வந்தவாசி; லாரி உரிமையாளர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 14 July 2021 5:48 PM GMT (Updated: 14 July 2021 5:48 PM GMT)

வந்தவாசியில் மணல் குவாரிகளை திறக்க வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வந்தவாசி

வந்தவாசியில் மணல் குவாரிகளை திறக்க வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காத்திருப்பு போராட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த சத்யா நகர் அருகில் தமிழ்நாடு மாநில மணல் லாரி சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் வந்தவாசி வட்டார அறிஞர் அண்ணா மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. வடக்கு மாவட்ட செயலாளர் தனசேகரன் தலைமை தாங்கினார்.

 தமிழகத்தில் மணல் குவாரிகளை திறக்க வேண்டும், குவாரி திறக்காததால் லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள், கிளீனர்கள், கட்டிட மேஸ்திரி, கார்பெண்டர் ஆகியோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. 

 ஏழை எளிய மக்கள் வீடுகட்ட மணல் இல்லாமல் தவிப்பதை போக்க வேண்டும். தமிழக அரசு ஆன்லைன் மூலம் மணல் விற்பனையை தொடங்க வேண்டும்.

மணல் குவாரிகளை திறக்க வேண்டும்

தேர்தல் அறிக்கையில் ஆட்சி பொறுப்பேற்றதும் மணல் குவாரிகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

125 நாட்கள் காத்திருந்தும் இன்னும் மணல் குவாரிகளை திறக்கவில்லை, உடனடியாக மணல் குவாரிகளை திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த காத்திருப்பு போராட்டம் நடந்தது.
போராட்டத்தில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story