கலவை அருகே குட்டையில் மூழ்கி 2 சிறுமிகள் பலி


கலவை அருகே குட்டையில் மூழ்கி 2 சிறுமிகள் பலி
x
தினத்தந்தி 14 July 2021 11:20 PM IST (Updated: 14 July 2021 11:20 PM IST)
t-max-icont-min-icon

கலவை அருகே 2 சிறுமிகள் குட்டையில் மூழ்கி பலியானார்கள்.

கலவை

குட்டையில் மூழ்கி பலி

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த செங்கனவரம் ஆதிதிராவிடர் பகுதியை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி. இவரது மகள் கல்பனா (வயது 11). மணி மகள் கீர்த்தி (8). இவர்கள் இருவரையும் நேற்று காலையில் இருந்து காணவில்லை. அவர்களை பெற்றோர்கள் தேடிக் கொண்டிருந்தனர்.

அப்போது அருகே உள்ள குட்டை கரையில் கல்பனா, கீர்த்தி ஆகிய இருவரின் ஆடைகளும் இருந்ததை சிலர் பார்த்து தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் பொதுமக்கள் சென்று குட்டையில் இறங்கி சிறுமிகளை தேடினர். அப்போது கல்பனா, கீர்த்தி ஆகிய இருவரும் பிணமாக மீட்கப்பட்டனர்.

போலீஸ் விசாரணை

இதை பார்த்ததும் சிறுமிகளின் பெற்றோர் கதறி  அழுதனர். இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி கலவை போலீஸ் நிலையத்த்துக்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலும் ராஜீவ் காந்தி போலீஸ் நிலையத்தில் புகார்கொடுத்தார்.

அதன்பேரில் கலவை இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி, சப்-இன்ஸ்பெக்டர் சரவணமூர்த்தி ஆகியோர் வழக்குப் பதிவு செய்து சிறுமிகளின் உடல்களை வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story