கருடா வாகன ரோந்து சேவை. போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்


கருடா வாகன ரோந்து சேவை. போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 14 July 2021 11:25 PM IST (Updated: 14 July 2021 11:25 PM IST)
t-max-icont-min-icon

கருடா வாகன ரோந்து சேவை

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நெடுஞ்சாலைகளில் ஏற்படும் குற்றச்சம்பவங்கள் மற்றும் விபத்துகளை குறைக்கும் விதமாக கருடா என்ற 24 மணி நேர இருசக்கர வாகன ரோந்து சேவையை ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா தொடங்கி வைத்தார். 

இந்த சேவையில் மொத்தம் 26 இதுசக்கர வாகனங்கள் உள்ளன. இந்த வாகனங்களின் மூலம் மாவட்டம் முழுவதும் உள்ள எல்லைகள் வரையறை செய்யப்பட்டு சுழற்சி முறையில் 24 மணி நேரமும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட நெடுஞ்சாலைகளில் ஏதேனும் அசம்பாவிதம் நடக்கும் பட்சத்தில் 9498180972 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story