வந்தவாசி தாலுகா அலுவலக இ-சேவை மையத்தில் திரண்ட பொதுமக்கள்


வந்தவாசி தாலுகா அலுவலக இ-சேவை மையத்தில் திரண்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 14 July 2021 11:26 PM IST (Updated: 14 July 2021 11:26 PM IST)
t-max-icont-min-icon

வந்தவாசி தாலுகா அலுவலக இ-சேவை மையத்திற்கு பொதுமக்கள் திரண்டனர்.

வந்தவாசி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா அலுவலக வளாகத்தில் அரசு இ-சேவை மையம் இயங்கி வருகிறது. இங்கு ஆதார் கார்டு, பெயர் திருத்தம், போன் எண்கள் இணைப்பு போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. 

 தற்போது பள்ளி, கல்லூரிகள் திறக்கும் காலம் என்பதால் பெற்றோர் தங்களின் பிள்ளைகளுக்கு சாதி சான்று, வருமான சான்று, இருப்பிட சான்று, முதல் பட்டதாரி சான்றிதழ் பெற கூட்டம் கூட்டமாக வருகின்றனர்.

போதிய குடிநீர் வசதி, அடிப்படை வசதிகள் இல்லாமல் இருக்கும் தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் சமூக விலகலை பின்பற்றாமலும், ஒருசிலர் முகக்கவசம் அணியாமலும் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள். 

அரசு சில தளர்வுகளுடன் ஊரடங்ைக நீட்டித்துள்ளது. பொதுமக்கள் கொரோனா அச்சமின்றி கும்பலாக நிற்பதால் தொற்று பரவும் அபாயம் உள்ளது. 

எனவே பொதுமக்கள் நலன் கருதி அதிகாரிகள் கூடுதல் கவுண்ட்டர்களை திறக்க வேண்டும், எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story