தச்சனேந்தல் விலக்கு பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படும் நிலை
சிவகங்கை- இளையான்குடி சாலையில் தச்சனேந்தல் விலக்கு பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படும் நிலை உள்ளதால் விபத்துகளை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இளையான்குடி,
ஜூலை.
சிவகங்கை- இளையான்குடி சாலையில் தச்சனேந்தல் விலக்கு பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படும் நிலை உள்ளதால் விபத்துகளை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விலக்கு ரோடு
இளையான்குடி அருகே உள்ள தச்சனேந்தல் கிராமத்தின் அருகில் விலக்கு ரோடு அமைந்துள்ளது. இந்த பகுதியில் சிவகங்கையில் இருந்து நேராக வரும் சாலையில் செல்லும் வாகனங்களால் அங்குள்ள வளைவில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. சிவகங்கையில் இருந்து வரும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் குறுகிய வளைவு காரணமாக விபத்துகளில் சிக்குகின்றன. இந்த நிலையில் நேற்று திண்டுக்கல்லைச் சேர்ந்த பாதிரியார் மார்க்ஸ் மகாதேவன் என்பவர் சிவகங்கையில் இருந்து இளையான்குடி நோக்கி வந்தபொழுது தச்சனேந்தல் விலக்கில் வளைவு பகுதியில் கார் விபத்துக்குள்ளாகி தலைகுப்புற கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் அவர் உயிர் தப்பினார். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து தடுப்பு நடவடிக்கை தேவை
சிவகங்கை சாலையில் புதிதாக வரும் வாகன ஓட்டிகளுக்கு இந்த குறுகிய வளைவு இருப்பது தெரியாததால் விபத்து ஏற்படுகிறது. எனவே இங்கு எச்சரிக்கை பலகை வைக்க வேண்டியது அவசியமாகும். மேலும் அந்த வளைவு பகுதியில் வேகத்தடை, ஒளிரும் தகவல் பலகை ஆகியவற்றையும் அமைத்து விபத்து தடுப்பு நடவடிக்கைகளை நெடுஞ்சாலைத்துறையினர் மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Related Tags :
Next Story