குடியாத்தத்தில் பட்டா வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்
பட்டா வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்
குடியாத்தம்
வேலூர் மாவட்ட மக்கள் நல சேவா சங்கம் சார்பில் குடியாத்தம் உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சுரேஷ், பாபு, சின்னதுரை, பிரதாபன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் ராஜா வரவேற்றார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அவ்வை மதியழகன், மக்கள் நல சேவா சங்க துணைத்தலைவர் முனிரத்தினம் உள்ளிட்டோர் கோரிக்கைகளைவலியுறுத்தி பேசினர்.
பேரணாம்பட்டு வருவாய் கிராம கணக்கில் இலவச கைப்பற்று இனாம் நிலம் என்பதை நீக்கி சுமார் 5 ஆயிரம் வீடுகளுக்கு நத்தம் பட்டம் வழங்க வேண்டும். பேரணாம்பட்டு தரைக்காடு பகுதியில் டி.சி நில ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். பேரணாம்பட்டு ஏரிக்கு வரக்கூடிய நீர்வரத்து கால்வாய் மற்றும் ஏரி மதகு கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்ற தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
Related Tags :
Next Story