குமரியில் இன்று 6 இடங்களில் தடுப்பூசி முகாம்
குமரி மாவட்டத்தில் இன்று 6 இடங்களில் கோவேக்சின் தடுப்பூசி முகாம் நடக்கிறது என மாவட்ட கலெக்டர் அரவிந்த் கூறியுள்ளார்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் இன்று 6 இடங்களில் கோவேக்சின் தடுப்பூசி முகாம் நடக்கிறது என மாவட்ட கலெக்டர் அரவிந்த் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தடுப்பூசி முகாம்
குமரி மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) கொரோனா தடுப்பூசி முகாம் 6 இடங்களில் நடக்கிறது. அதாவது பூதப்பாண்டி, குழித்துறை, பத்மநாபபுரம் ஆகிய அரசு ஆஸ்பத்திரிகள், நாகர்கோவிலில் குருசடி புனித அந்தோணி மேல்நிலைப்பள்ளி மற்றும் எஸ்.எம்.ஆர்.வி. பள்ளி ஆகியவற்றில் கோவேக்சின் 2-வது டோஸ் தடுப்பூசி மருந்து செலுத்தப்படுகிறது. இந்த முகாம்களில் தடுப்பூசிக்காக டோக்கன் பொதுமக்களுக்கு நேரடியாக வழங்கப்படுகின்றன.
இதேபோல் கோவேக்சின் 2-வது டோஸ் வெளிநாடு செல்வோர்க்கான தடுப்பூசி முகாம் குழித்துறை மற்றும் நாகர்கோவில் வடிவீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றில் நேரடியாக டோக்கன் வழங்கப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன.
230 பேருக்கு சிகிச்சை
குமரி மாவட்டத்தில் இதுவரை 8 லட்சத்து 50 ஆயிரத்து 670 பேருக்கு தொற்று பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புக்கு 230 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டம் முழுவதும் நேற்று முககவசம் மற்றும் சமூக இடைவெளி ஆகியவற்றை கடைபிடிக்காத 113 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்தம் இதுவரை 97 ஆயிரத்து 656 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story