வேலூர் மாவட்டத்தில் 14 தாசில்தார்கள், 8 துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம்
வேலூர் மாவட்டத்தில் 14 தாசில்தார்கள், 8 துணை தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வேலூர்
14 தாசில்தார்கள் பணியிட மாற்றம்
வேலூர் மாவட்டத்தில் பல்வேறு அரசுத்துறைகளில் பணியாற்றி வந்த 14 தாசில்தார்கள், 8 துணை தாசில்தார்களை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-
பேரணாம்பட்டு தாலுகா சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் வெங்கடேசன் கே.வி.குப்பம் தாசில்தாராகவும், அங்கு பணிபுரிந்த ராஜேஸ்வரி தமிழ்நாடு மாநில வாணிபக்கழக மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் சில்லரை விற்பனை உதவி மேலாளராகவும், அங்கு பணிபுரிந்த உஷாராணி கே.வி.குப்பம் தாலுகா சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும், அங்கு பணிபுரிந்த விநாயகமூர்த்தி பேரணாம்பட்டு தாசில்தாராகவும், அங்கு பணிபுரிந்த கோபி வேலூர் வட்ட வழங்கல் அலுவலராகவும், அங்கு பணிபுரிந்த நெடுமாறன் காட்பாடி தாலுகா சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும், அங்கு பணிபுரிந்த செந்தில் வேலூர் தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்படுகிறார்கள்.
இதேபோன்று வேலூர் தாசில்தார் ரமேஷ் பேரணாம்பட்டு தாலுகா சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும், வேலூர் வருவாய் கோட்ட அலுவலரின் நேர்முக உதவியாளர் சரண்யா காட்பாடி தாசில்தாராகவும், அங்கு பணிபுரிந்து வரும் பாலமுருகன் அகதிகள் பிரிவு தாசில்தாராகவும், அங்கு பணிபுரிந்த லலிதா குடியாத்தம் தாசில்தாராகவும், அங்கு பணிபுரிந்த வத்சலா வேலூர் வருவாய் கோட்ட அலுவலரின் நேர்முக உதவியாளராகவும், வேலூர் தாலுகா ஆதிதிராவிடர் நல தாசில்தார் கீதா இந்துசமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் கோவில் நிலங்கள் அலுவலகத்தில் தனி தாசில்தாராகவும், அங்கு பணிபுரிந்த குமார் வேலூர் தாலுகா ஆதிதிராவிடர் நல தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
8 துணை தாசில்தார்கள்
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் (எப்-பிரிவு) தலைமை உதவியாளராக பணியாற்றிய சுகுமாரன் காட்பாடி வட்ட வழங்கல் அலுவலராகவும், அணைக்கட்டு தாலுகா தேர்தல் துணை தாசில்தார் ராஜ்குமார் அணைக்கட்டு தாலுகா தலைமையிடத்து துணை தாசில்தாராகவும், அங்கு பணிபுரிந்த சசிகலா வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் (எப்-பிரிவு) தலைமை உதவியாளராகவும், வேலூர் மாவட்ட தேர்தல் துணை தாசில்தார் சுதா வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் (ஜி-பிரிவு) தலைமை உதவியாளராகவும், அங்கு பணிபுரிந்த நதியா கே.வி.குப்பம் வட்ட வழங்கல் அலுவலராகவும், அங்கு பணிபுரிந்த சாந்தி அணைக்கட்டு தாலுகா தேர்தல் துணை தாசில்தாராகவும், வேலூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலக கண்காணிப்பாளர் செந்தாமரை குடியாத்தம் தாலுகா தலைமையிடத்து துணை தாசில்தாராகவும், அங்கு பணிபுரிந்த நித்யா வேலூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலக கண்காணிப்பாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story