3 மாதங்களுக்கு பிறகு உழவர் சந்தை திறப்பு
3 மாதங்களுக்கு பிறகு உழவர் சந்தை திறப்பு
குடியாத்தம்
குடியாத்தம் ராபின்சன் குளக்கரை பகுதியில் உழவர் சந்தை இயங்கி வருகிறது. கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 11-ந் தேதி குடியாத்தம் உழவர் சந்தை மூடப்பட்டு, தற்காலிகமாக சில நாட்கள் குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் இயங்கியது.
ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின் வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன், வேலூர் மாவட்ட வேளாண் விற்பனை துறை துணை இயக்குனர் நரசிம்ம ரெட்டி ஆகியோர் உத்தரவின் பேரில் 3 மாதங்களுக்குப் பிறகு நேற்று முதல் குடியாத்தம் உழவர் சந்தை இயங்கத் தொடங்கியது. குடியாத்தம் உழவர் சந்தை நிர்வாக அதிகாரி லோகபிரியன் தலைமையில் உழவர் சந்தை ஊழியர்கள் உழவர் சந்தையை சுத்தம் செய்து, பிளீச்சிங் பவுடர், கிருமிநாசினி தெளித்தும் சுகாதார பணிகளை மேற்கொண்டனர். மேலும் 65 கடைகள் அமைக்க வேண்டிய இடத்தில் 35 கடைகள் அமைக்கப்பட்டது. விவசாயிகள் மற்றும் காய்கறிகள் வாங்க வந்த பொதுமக்கள் முக கவசம் மற்றும் சமூக இடைவெளி பின்பற்றிய பின்னரே அனுமதிக்கப்பட்டனர் சந்தை மீண்டும் தொடங்கியதால் குடியாத்தம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story