வேலூர் மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா


வேலூர் மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 15 July 2021 12:07 AM IST (Updated: 15 July 2021 12:07 AM IST)
t-max-icont-min-icon

46 பேருக்கு கொரோனா

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக 30-க்கும் குறைவான நபர்களுக்கு தொற்று உறுதியானது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு நேற்று திடீரென அதிகரித்துள்ளது. மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 46 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. நேற்று முன்தினம் 24 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய பாதிப்பு இருமடங்காக அதிகரித்துள்ளது. 

வேலூர் மாவட்டத்தில் இதுவரை 47 ஆயிரத்து 468 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 45 ஆயிரத்து 988 பேர் குணமடைந்துள்ளனர். 403 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அரசு, தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
கொரோனா தடுப்பு விதிமுறைகளை பொதுமக்கள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story