இரைதேடிய ஆடுகள் மலை உச்சியில் சிக்கி தவிப்பு
இரைதேடிய ஆடுகள் மலை உச்சியில் சிக்கி தவிப்பு
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளம் திருவள்ளுவர்நகர் மொட்டமலை பகுதியில் மலை முகடுகளாக நீண்டதூரம் பாறை அமைந்து உள்ளது. இந்த பகுதியின் அடிவாரத்தில் முளைத்த செடி, கொடிகளை சார்ந்து ஆடுகள் மேய்க்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் பொன்னுத்தாய் என்பவர் நேற்று அவரது ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது 2 ஆடுகள் இரையை தேடி மலைபாறை உச்சிக்கு சென்றுவிட்டது. அதை அறியாத பொன்னுத்தாய் தனது ஆடுகளை தேடினர். ஆனால் கண்ணுக்கு எட்டிய தூரம் காணவில்லை. இந்தநிலையில் மலை உச்சிக்கு சென்ற ஆடுகள் பாறையின் இடுக்கில் சிக்கி கொண்டன. மேலும் மலையை விட்டு கீழே இறங்க முடியாமல் சிக்கி தவித்தபடி கத்தியது. இதையடுத்து பொன்னுத்தாய் தனக்கு தெரிந்தவர்களை அழைத்து ஆடுகளை மீட்குமாறு கூறினார்.. ஆனால் அவர்கள் மலையில் இருந்து பாறை உருண்டு விடும். அதனால் அங்கு செல்லமுடியாது என்று கூறிவிட்டனர். இதனையடுத்து மதுரை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.. தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையில் தீயணைப்பு படையினர் போராடி நீண்ட நேரத்திற்கு பிறகு பாதுகாப்பாக ஆடுகளை மீட்டு ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story