புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
சிவகாசி அருகே புகையிலை விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி,
மாரனேரி போலீஸ்நிலைய எல்லைக்கு உட்பட்ட விளம்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் சப்-இன்ஸ்பெக்டர் ஆத்தீஸ்வரன் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக வந்த பூலாவூரணியை சேர்ந்த செல்வம் மகன் அனந்தன் (வயது 42) என்பவரை அழைத்து விசாரித்தார். அப்போது அவர் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர் வைத்திருந்த கைபையை சோதனை செய்த போது அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை போலீசார் பறிமுதல் செய்து அனந்தனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதேபோல் சிவகாசி டவுன் சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் ரிசர்வ்லைன் பகுதியில் உள்ள ஒரு பெட்டி கடையில் திடீர் ஆய்வு செய்தார். அப்போது அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரிவந்தது. இதை தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் கணேசன் (45) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story