தனியார் வங்கி மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை
கரூரில் தனியார் வங்கி மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம், வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
கரூர்
நகை-பணம் கொள்ளை
கரூர் தெற்கு காந்திகிராமம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய காலனியில் வசித்து வருபவர் கண்ணன் (வயது 45). இவர் மதுரையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று வெளியூர் சென்றுவிட்டு கண்ணன் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது, வீட்டின் அலமாரியில் வைத்திருந்த 3½ பவுன் தங்கச்சங்கிலி, 1½ பவுன் பிரேஸ் லெட், 1 பவுன் தங்க மோதிரம், 4 பவுன் தங்க வளையல், 2 சில்வர் விளக்குகள், ஒரு வெள்ளி டம்ளர், ஒரு வெள்ளித்தட்டு, லேப்டாப், ரூ.20 ஆயிரம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
வலைவீச்சு
இதுகுறித்து கண்ணன் தாந்தோணிமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றார். இந்த கொள்ளையில் மொத்தம் 10 பவுன் தங்கநகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story