மகளிர் ஊர் நல அலுவலரின் கணவர் விபத்தில் பலி
மகளிர் ஊர் நல அலுவலரின் கணவர் விபத்தில் பலியானார்
குன்னம்
சிவகங்கை மாவட்டம், இளையான்குடியை சேர்ந்தவர் மாரி (வயது 48). இவருடைய மனைவி லட்சுமி (54). இவர் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள வேப்பூர் யூனியன் அலுவலகத்தில் மகளிர் ஊர் நல அலுவலராக பணிபுரிந்து வருகிறார். அவர்கள் குன்னம் அருகே உள்ள நன்னை கிராமத்தில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர். மாரி, தினமும் மனைவி லட்சுமியை நன்னை கிராமத்திலிருந்து வேப்பூர் யூனியன் அலுவலகத்தில் விட்டு விட்டு மாலை வீட்டுக்கு ஸ்கூட்டரில் அழைத்து வருவது வழக்கம். அதேபோல நேற்று முன்தினம் காலை மனைவியை அலுவலகத்தில் விட்டுவிட்டு மாலை வீட்டுக்கு அழைத்துச் செல்ல ஸ்கூட்டரில் சென்றார். ஆனால் லட்சுமி அந்த வழியாக சென்ற மோட்டார் சைக்கிளில் லிப்ட் கேட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இந்தநிலையில் மாரி வேப்பூர் சென்றுவிட்டு அங்கிருந்து நன்னை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது கிழுமத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மணிவண்ணன் மகன் அன்புமணி (21) ஓட்டி வந்த கார் எதிர்பாராதவிதமாக ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் தலையில் அடிபட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து லட்சுமி கொடுத்த புகாரின்பேரில் குன்னம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகாயினி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Tags :
Next Story