கடையம் அருகே அத்ரி மலைக்கோவிலில் நித்திய பூஜைக்கு அனுமதி
கடையம் அருகே அத்ரி மலைக்கோவிலில் நித்திய பூஜைக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
கடையம்:
கடையம் அருகே உள்ள கடனாநதி அணைப்பகுதிக்கு மேல் அமைந்துள்ளது அத்ரிமலை கோவில். இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவிலில் நித்திய பூஜைகளுக்கு வனத்துறையினர் விதித்த தடையால் கடந்த 3 ஆண்டுகளாக நித்திய பூஜைகள் நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடையம் பகுதிக்கு வந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம், ேகாவிலில் நித்திய பூஜைகள் நடைபெற அனுமதி அளிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து நித்திய பூைஜகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, நேற்று முதல் அத்ரி மலைக்கோவிலில் நித்திய பூைஜகள் நடைபெற தொடங்கி உள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்து உள்ளனர்.
Related Tags :
Next Story