அம்மன் கோவில்களின் உண்டியலை உடைத்து பணம் திருட்டு


அம்மன் கோவில்களின் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
x
தினத்தந்தி 15 July 2021 1:52 AM IST (Updated: 15 July 2021 1:52 AM IST)
t-max-icont-min-icon

அம்மன் கோவில்களின் உண்டியலை உடைத்து பணம் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்

பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம் கீழக்கணவாய் மெயின்ரோடு அருகே மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் தர்மகர்த்தா அபிமன்னன் நேற்று முன்தினம் இரவு கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். வழக்கம்போல நேற்று காலை கோவிலை திறக்க வந்தபோது கோவில் உண்டியல் திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். கோவிலின் பின்புறமுள்ள ஏரிக்கரையில் உண்டியல் கிடந்தது. ஆனால், அதில் இருந்த பணம் திருட்டு போயிருந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதேபோல பெரம்பலூர் துறைமங்கலம் கே.கே.நகர் புதிய காலனியில் உள்ள சிவசக்தி மகா மாரியம்மன் கோவிலின் உண்டியலின் பூட்டை உடைத்தும் அதில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். 2 கோவில்களின் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story