ஸ்கூட்டரில் சென்ற ஆசிரியையிடம் தங்கச் சங்கிலி பறிப்பு
ஸ்கூட்டரில் சென்ற ஆசிரியையிடம், மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் தங்க சங்கிலியை பறித்து சென்றனர்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம் சத்திரமனை காமராஜர் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி ஆனந்தி (வயது 39). இவர் வேலூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். ஆனந்தி நேற்று சொந்த வேலையாக ஸ்கூட்டரில் பெரம்பலூர் வந்து விட்டு, மீண்டும் ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். பெரம்பலூர்-செட்டிகுளம் மெயின்ரோட்டில் சத்திரமனை அருகே சென்று கொண்டிருந்த போது ஆனந்தியை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் திடீரென்று ஆனந்தி கழுத்தில் அணிந்திருந்த 1¾ பவுன் சங்கிலியை பறித்து விட்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இதில் ஸ்கூட்டரில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த ஆனந்திக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுதொடர்பாக பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் ஆனந்தி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கச்சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story