வனப்பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற 16 பேருக்கு அபராதம்


வனப்பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற 16 பேருக்கு அபராதம்
x
தினத்தந்தி 15 July 2021 2:02 AM IST (Updated: 15 July 2021 2:02 AM IST)
t-max-icont-min-icon

புளியங்குடியில் வனப்பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற 16 பேருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.

புளியங்குடி:
நெல்லை மாவட்ட வன அலுவலர் கவுதம் ஆலோசனையின் பேரில் புளியங்குடி வனச்சரகர் ஸ்டாலின் தலைமையில் வனவர் உபேந்திரன், வனக்காப்பாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் புளியங்குடி டி.என்.புதுக்குடி வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது புளியங்குடியைச் சேர்ந்த ராஜ்குமார், அரிகரசிவா, மாசிலாமணி, அருண்குமார், அழகுராஜ், மலர்விழிகண்ணன், குருசாமி, சக்தி, ஆனந்த், தங்கத்துரை, முருகானந்தம், சுப்பிரமணியன், அரிகரசுதன், ராமர் பாண்டி, முத்துராஜ், குருராஜ் ஆகிய 16 பேர் புளியங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சேம்புத்துநாதர் கோவிலுக்கு செல்வதற்காக தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் நுழைந்து கொண்டிருந்தனர். அவர்களை தடுத்து நிறுத்திய வனத்துறையினர் தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் நுழைந்ததற்காக 16 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து ரூ.70 ஆயிரம் அபராதம் விதித்தனர். 

மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சேம்புத்துநாதர் கோவிலுக்கு செல்வதற்கு அனுமதி இல்லை. எனவே தடை செய்யப்பட்ட வனப்பகுதிகளில் அத்துமீறி நுழைபவர்கள் மீது இந்திய வன உயிரின சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

Next Story