கொரோனாவால் இறந்த விவசாயிகளின் ரூ.79.47 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி - மந்திரி எஸ்.டி.சோமசேகர் பேட்டி
கர்நாடகத்தில் கொரோனாவால் இறந்த விவசாயிகளின் ரூ.79.47 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக கூட்டுறவுத்துறை மந்திரி எஸ்.டி.சோமசேகர் கூறினார்.
பெங்களூரு:
கர்நாடக கூட்டுறவுத்துறை மந்திரி எஸ்.டி.சோமசேகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பயிர்க்கடன் தள்ளுபடி
கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இறந்தவர்களில் 10 ஆயிரத்து 187 பேர், விவசாயிகள் என தெரிய வந்துள்ளது. கூட்டுறவு வங்கிகளில் அவாகள் ரூ.79.47 கோடி பயிர்க்கடன் வாங்கியுள்ளனர். அந்த பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து இன்னும் 3, 4 நாட்களில் முதல்-மந்திரி எடியூரப்பா இறுதி முடிவை அறிவிப்பார். கஷ்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு உதவ அரசு எப்போதும் தயாராக உள்ளது.
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் சுலபமாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு 24½ லட்சம் லட்சம் விவசாயிகளுக்கு ரூ.17 ஆயிரத்து 108 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டது. கொரோனா பாதிப்பால் இறந்த விவசாயிகளில் பாகல்கோட்டையில் 672 விவசாயிகள், பெலகாவியில் 3,334 விவசாயிகள், பல்லாரியில் 357 விவசாயிகள், பெங்களூருவில் 381 பேர், பீதரில் 824 பேர், சிக்கமகளூருவில் 113 பேர், சித்ரதுர்காவில் 156 பேர், தாவணகெரேயில் 402 பேர்.
விவசாயிகளின் குடும்பங்கள்
ஹாசனில் 454 பேர், கலபுரகியில் 224 பேர், உத்தரகன்னடாவில் 186 பேர், தார்வாரில் 376 பேர், குடகில் 113 பேர், கோலாரில் 147 பேர், மண்டியாவில் 410 பேர், மைசூருவில் 281 பேர், ராய்ச்சூரில் 237 பேர், சிவமொக்காவில் 307 பேர், தட்சிண கன்னடாவில் 152 பேர், துமகூருவில் 307 பேர், விஜயாப்புராவில் 754 பேர் என மொத்தம் 10 ஆயிரத்து 187 விவசாயிகளின் குடும்பங்கள் இந்த கடன் தள்ளுபடியால் பயன் பெறுகின்றன.
இவ்வாறு எஸ்.டி.சோமசேகர் கூறினார்.
Related Tags :
Next Story