அம்பேத்கர் சிலை திறக்கப்பட்டதால் திடீர் பரபரப்பு


அம்பேத்கர் சிலை திறக்கப்பட்டதால் திடீர் பரபரப்பு
x
தினத்தந்தி 15 July 2021 2:54 AM IST (Updated: 15 July 2021 2:54 AM IST)
t-max-icont-min-icon

கெங்கவல்லி அருகே அம்பேத்கர் சிலை திறக்கப்பட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

கெங்கவல்லி
கெங்கவல்லி அருகே ஒதியத்தூர் ஊராட்சியில் கடந்த ஜனவரி மாதம் அம்பேத்கர் சிலையை ஒரு தரப்பினர் வைத்தனர். ஆனால் போலீசில் உரிய அனுமதி பெறாமல் இந்த சிலையை இங்கு வைக்கக்கூடாது என்று மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டதை அடுத்து, அந்த சிலையை துணியால் மூடி வைத்து போலீஸ் மற்றும் வருவாய்த்துறையினர் நடவடிக்ைக எடுத்தனர்.
இந்த நிலையில், நேற்று அம்பேத்கர் சிலை மீது சுற்றியிருந்த துணி அகற்றப்பட்டு சிலையை ஒரு தரப்பினர் திறந்தனர். இதனால் அந்த பகுதியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. உடனடியாக தாசில்தார் வெங்கடேஷ், கெங்கவல்லி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் திறக்கப்பட்ட அம்பேத்கர் சிலையின் மீது மீண்டும் துணியை சுற்றி மறைக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. இதையொட்டி அந்த பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story