கொரோனாவுக்கு 164 பேர் பாதிப்பு


கொரோனாவுக்கு 164 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 15 July 2021 2:54 AM IST (Updated: 15 July 2021 2:54 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 164 பேர் பாதிப்பட்டுள்ளனர்.

சேலம்
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 162 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 164 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 25 பேரும், சேலம் ஒன்றிய பகுதிகளில் 82 பேரும், ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில் 37 பேரும், நகராட்சி பகுதிகளில் 17 பேரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர். இதுதவிர வெளி மாவட்டங்களில் இருந்து சேலம் மாவட்டத்துக்கு வந்த 3 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்
இவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 91 ஆயிரத்து 371 பேர் பாதிக்கப்பட்டனர். தொடர்ந்து 1,906 பேருக்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 227 பேர் குணமடைந்து விட்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
இந்தநிலையில் சேலத்தை சேர்ந்த பெண் உள்பட 2 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி அரசு ஆஸ்பத்திரியில் பலியாகினர். சேலம் மாவட்டத்தில் இவர்கள் உள்பட கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை  1,521 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story