திருவள்ளூர் அருகே முன்விரோதத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து; நண்பர் கைது


திருவள்ளூர் அருகே முன்விரோதத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து; நண்பர் கைது
x
தினத்தந்தி 15 July 2021 10:51 AM IST (Updated: 15 July 2021 10:51 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே முன்விரோதத்தில் வாலிபரை கத்தியால் குத்திய நண்பரை கைது செய்தனர்.

திருவள்ளூர், 

திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது24). இந்தநிலையில் வெங்கடேசனும் அதே பகுதியை சேர்ந்த பிரவீன் (22) என்பவரும் நண்பர்கள் ஆவர். இவர்கள் இருவரும் நேற்றுமுன்தினம் மது அருந்திக் கொண்டிருந்தனர்.

அப்போது அவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. பின்னர் இருவரும் சென்றுவிட்டனர். கீழ்நல்லாத்தூர் பகுதியில் வெங்கடேசன் சென்று கொண்டிருந்த போது, அவரை வழிமறித்த பிரவீன் முன் விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு அவரை தகாத வார்த்தையால் பேசி கத்தியால் இடதுபக்க கையில் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டார்.

இதில் காயமடைந்த அவர், திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். நடந்த சம்பவம் குறித்து வெங்கடேசன் மணவாளநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவீனை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல், திருச்சி மாவட்டம், எடமலைப்பட்டி புதூரரை சேர்ந்தவர் பழனிக்குமார் (48).இவர் நேற்று முன்தினம் தனது மகன் விமலுடன் அப்பகுதியில் உள்ள கடைக்கு இரவு உணவு சாப்பிடச் சென்றார். அப்போது அங்கிருந்த 5 பேர் கத்தியால் பழனிக்குமாரை தலை மற்றும் தோள்பட்டையில் வெட்டிவிட்டு கொலை மிரட்டல் விடுத்து தப்பியோடிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய 5 பேரை தேடி வருகின்றனர்.

Next Story