தூத்துக்குடியில் பிரபல ரவுடி கைது


தூத்துக்குடியில் பிரபல ரவுடி கைது
x
தினத்தந்தி 15 July 2021 5:13 PM IST (Updated: 15 July 2021 5:13 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர்

தூத்துக்குடி:
தூத்துக்குடி தாமோதரன்நகரை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவருடைய மகன் இசக்கிராஜா (வயது 20). பிரபல ரவுடி. இவர் தூத்துக்குடி கந்தசாமிபுரம் பகுதியில் வந்த ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு அரிவாளை காட்டி மிரட்டினாராம். இதுகுறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் வழக்கு பதிவு செய்து இசக்கிராஜாவை கைது செய்தனர். அவரிடம் இருந்து அரிவாளையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இசக்கிராஜா மீது தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையத்தில் திருட்டு உள்பட 5 வழக்குகளும், வடபாகம் போலீஸ் நிலையத்தில் கொலை மிரட்டல் வழக்கும் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story