மாவட்ட செய்திகள்

நிர்பந்தம் காரணமாக அரசியலை விட்டு ஒதுங்கினாரா? சசிகலா விளக்கம் + "||" + Did he leave politics due to compulsion? Sasikala interpretation

நிர்பந்தம் காரணமாக அரசியலை விட்டு ஒதுங்கினாரா? சசிகலா விளக்கம்

நிர்பந்தம் காரணமாக அரசியலை விட்டு ஒதுங்கினாரா? சசிகலா விளக்கம்
நிர்பந்தம் காரணமாக அரசியலை விட்டு ஒதுங்கினேனா? என்பது குறித்து சசிகலா பதில் அளித்துள்ளார்.
சென்னை,

சேலத்தை சேர்ந்த கோவிந்தராஜ், டாக்டர் ராஜசேகர், நாமக்கல்லை சேர்ந்த சுகந்தி, அம்பிகா பூபதி மற்றும் குவைத் நாட்டை சேர்ந்த சக்திவேல்ராஜன் ஆகிேயாருடன் சசிகலா நேற்று ெதாைலபேசியில் பேசினார்.

அதன் விவரம் வருமாறு:-


நிர்பந்தம் காரணமா?

எல்லாரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும், ஒற்றுமையாக இருந்து தேர்தலை சந்தித்து வெற்றிபெற வேண்டும் என்பது தான் என் எண்ணம். அப்படி செய்திருந்தால் நிச்சயம் வெற்றிபெற்று ஜெயலலிதா ஆட்சி தொடர்ந்திருக்கும். இனிமேலும் கட்சி வீணாவதை என்னால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.

அரசியலை விட்டு விலகி இருக்கும்படி என்னை யாராவது நிர்பந்தித்தார்களா? என தொண்டர்கள் கேட்கிறார்கள். என்னை யாராவது நிர்பந்தப்படுத்த முடியுமா? என்னையே வேண்டாம் என்று சொல்லும்போது நான் என்ன செய்யமுடியும்? தனியாக நின்று 150 இடங்கள் வரை வெற்றிபெறுவோம் என்றார்கள். நானும் கட்சி வெற்றிக்காக அமைதியாக இருந்தேன்.

சிறையில் கொடுமை

மற்றபடி என்னை யாராலும் நிர்பந்திக்க முடியாது. நான் யாருக்கும் பயப்படுபவளே கிடையாது. 1996-ம் ஆண்டு நடந்த தேர்தலுக்கு பிறகு என்னை சிறையில் அடைத்து அவ்வளவு கொடுமைகளை தந்தார்கள். அதற்கே நான் அசரவில்லை.

இவ்வாறு சசிகலா பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

1. சந்திரமுகியாக நடிக்கிறாரா அனுஷ்கா? - இயக்குனர் பி.வாசு விளக்கம்
பி.வாசு இயக்கத்தில் உருவாக உள்ள ‘சந்திரமுகி’ படத்தின் 2-ம் பாகத்தில், நடிகர் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்க உள்ளார்.
2. விவாகரத்து வதந்திக்கு சமந்தா விளக்கம்
நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் காதல் திருமணம் செய்து கொண்டனர்.
3. திருவண்ணாமலையில் டி.டி.வி.தினகரன் மகள் திருமணம் சசிகலா முன்னிலையில் நடந்தது
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மகள் திருமணம் நேற்று திருவண்ணாமலையில் நடைபெற்றது.
4. விமர்சனத்துக்கு கனகா விளக்கம்
விமர்சனத்துக்கு கனகா விளக்கம்.
5. சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தது ஏன்? எடப்பாடி பழனிசாமி விளக்கம்
தமிழக சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தது ஏன்? என்பது பற்றி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை