தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் ரூ.40 கோடியில்தூண்டில் வளைவு விரிவாக்கம் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் ரூ.40 கோடி செலவில் தூண்டில் வளைவு விரிவாக்கம் செய்யப்பட உள்ளது என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் ரூ.40 கோடி செலவில் தூண்டில் வளைவு விரிவாக்கம் செய்யப்பட உள்ளது என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
புறக்காவல் நிலையம்
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் புதிதாக புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கினார். தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ், மீன்வளத்துறை இணை இயக்குனர் அமல்சேவியர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கலந்து கொண்ட புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ரூ.40 கோடி
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. அதன்படி புறக்காவல் நிலையம் திறந்து வைக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் விற்கப்படும் மீன்களுக்கு நல்ல மதிப்பு உள்ளது. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்கள் சென்னை, பெங்களுர் மற்றும் பல்வேறு நாடுகளுக்கும் மீன்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
தூத்துக்குடி துறைமுகத்தை மேம்படுத்திட ரூ.40 கோடி மதிப்பிட்டில் தூண்டில் வளைவு நீட்டிப்பு பணிகள் செய்யப்பட உள்ளது. தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், மீன்பிடி துறைமுகத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இங்கு மீன்களை வைத்து பாதுகாத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் வகையில் குளிர்சாதன கிட்டங்கி அமைக்கப்பட உள்ளது. இந்த பகுதியில் கண்காணிப்பு கேமிராக்களும் பொருத்தப்பட்டு முழுமையாக கண்காணிக்கப்பட உள்ளது. மீனவர்கள் மற்றும் இங்கு வரும் வியாபாரிகள் அனைவருக்கும் பாதுகாப்பாக இருப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
விழாவில் உதவி கலெக்டர் (பயிற்சி) ஸ்ருதயஞ் ஜெய் நாராயணன், தூத்துக்குடி ஒருங்கிணைந்த அனைத்து விசைப்படகுகள் சங்க தலைவர் சேவியர்வாஸ், வட்டக்காரர் சங்க தலைவர் பிரவின், மீன்வளத்துறை துணை இயக்குநர்கள் வயலா, விஜயராகவன், மீன்துறை ஆய்வாளர் பொன்சரவணன் மற்றும் அலுவலர்கள், மீனவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story