கோவில்பட்டியில் ரூ.2.50 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் வியாபாரி கைது


கோவில்பட்டியில்  ரூ.2.50 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் வியாபாரி கைது
x
தினத்தந்தி 15 July 2021 5:47 PM IST (Updated: 15 July 2021 5:47 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் ரூ.2.50 லட்சம் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்

கோவில்பட்டி:
கோவில்பட்டி மந்தித்தோப்பு செல்லும் சாலையில் உள்ள ஒரு கிட்டங்கியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கோவில்பட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி, சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் மந்தித்தோப்பு சாலையில் துளசிங்க நகரில் உள்ள சந்தேகத்துக்கு இடமான கிட்டங்கியில் சோதனையிட்டனர். இதில், ரூ.2½ லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த கிட்டங்கியில் இருந்தவரிடம் நடத்திய விசாரணையில், அவர் அன்னை தெரசா நகரைச்சேர்ந்த சுப்பையா மகன் செல்வன் (34) என்பதும், வியாபாரியான இவர் துளசிங்க நகரில் அரிசி கடை நடத்தி வருவதும் தெரியவந்தது. இதுகுறித்து மேற்கு பொலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வனை கைது செய்தனர். கிட்டங்கியில் இருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story