சாத்தான்குளம் அருகே கிணற்றில் தவறிவிழுந்த பெண் சாவு


சாத்தான்குளம் அருகே  கிணற்றில் தவறிவிழுந்த பெண் சாவு
x
தினத்தந்தி 15 July 2021 9:26 PM IST (Updated: 15 July 2021 9:26 PM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் அருகே கிணற்றில் தவறி விழுந்த பெண் இறந்து போனார்

சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே உள்ள தெற்கு பேய்க்குளத்தைச் சேர்ந்த சுப்பையா மனைவி பேச்சியம்மாள் (வயது 54). இவருக்கு 2 மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகிவிட்டது. கணவர் சுப்பையா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து போனார். பேச்சியம்மாள் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அதே ஊரைச் சேர்ந்த கண்ணன் என்பவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் பேச்சியம்மாள் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எபனேசர், சாத்தான்குளம் தீயணைப்பு நிலைய அலுவலர் மாரியப்பன் மற்றும் வீரர்கள் விரைந்து சென்று அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசேதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் பேச்சியம்மாள் கிணற்றில் தவறி விழுந்து இறந்து போனது தெரியவந்தது.
இதுகுறித்து சாத்தான்குளம் ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரித்து வருகின்றனர்.

Next Story