காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை


காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 15 July 2021 10:13 PM IST (Updated: 15 July 2021 10:13 PM IST)
t-max-icont-min-icon

பெருந்தலைவர் காமராஜரின் 119-வது பிறந்த நாள் விழாவையொட்டி திண்டுக்கல்லில் அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

திண்டுக்கல்: 

காமராஜர் பிறந்தநாள் விழா

பெருந்தலைவர் காமராஜரின் 119-வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி திண்டுக்கல் எம்.எஸ்.பி. சோலைநாடார் நினைவு மேல்நிலைப்பள்ளி சார்பில் தாளாளர் பி.முருகேசன், உதவி தலைவர்கள் துரைசாமி, கமலநாதன் ஆகியோர் திண்டுக்கல்லில் உள்ள காமராஜரின் வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

மேலும் திண்டுக்கல் நாடார் ஐக்கிய சேவா சங்கம் சார்பில் தலைவர் காசிராஜன் தலைமையிலான நிர்வாகிகள் காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்தனர். 

திண்டுக்கல் மாவட்ட நாடார் முன்னேற்ற சங்கம் சார்பில் ஒருங்கிணைப்பாளர் மதிதேவராஜ், தலைவர் வீரமணி, செயலாளர் மங்கைராஜா, நிர்வாகிகள் சரவணன், சக்திவேல் உள்ளிட்டோர், காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதேபோல் திருமங்கலம் நாடார் இளைஞர் சங்கம் சார்பில் தலைவர் சோமசுந்தரம் தலைமையிலான நிர்வாகிகள் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

அரசியல் கட்சியினர்
மேலும் திண்டுக்கல் மாநகர மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமையிலான காங்கிரஸ் கட்சியினர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

இந்து மக்கள் கட்சி சார்பில் மாநில துணை பொதுச்செயலாளர் தர்மா தலைமையிலான நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். மக்கள் நீதிமய்யம் கட்சியின் மகளிர் அணி சார்பில் மாவட்ட செயலாளர் சமேஸ்வரி உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.

சின்னாளப்பட்டியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நகர தலைவர் கனகராஜ் தலைமையில், காமராஜரின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜி மன்றம் சார்பில் பொறுப்பாளர் கோபிநாத் தலைமையில் திண்டுக்கல் தெற்கு ரதவீதியில் காமராஜரின் உருவபடத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


Next Story